Endhiranaudio release on july 31th in malaysia
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து [...]
Enthiran Comes as Deepavali Feast!!!
தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு! சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம். படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் [...]
Enthiran Audio Release in July
சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்பட உள்ளன. இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆடியோ ரிலீஸ் வெளிநாட்டில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி: “சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் ஜோடியாக [...]
ENthiran : ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி!
ரஜினியின் எந்திரன் படம் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம், அவரது புதுப்படம் என்னவென்பது குறித்து ஆளுக்கொரு யூகங்களை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்திரனில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட ரஜினி, அடுத்து எந்திரன் ரிலீஸ், இமயமலைப் பயணம் என்று பிஸியாவதற்குள், அவரிடம் ஒரு முக்கிய அப்பாயிண்ட்மெண்டுக்காக ரசிகர் மன்றப் பிரமுகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் இறுதியான முடிவைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த நச்சரிப்பும். சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா [...]
Enthiran : Dubai is the probable venuefor enthiran audio lunch
வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை: ‘இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து… டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது ‘எந்திரன்’ ஃபீவர். ‘என்னதான் நடக்கிறது உள்ளே?’ என்று எட்டிப் பார்த்ததில் இருந்து… ஹீரோ, வில்லன்… இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, [...]
Even a Bit of News create big hype of Enthiran!!!!
எந்திரன் பற்றிய வெளியாகும் சின்ன தகவல் அல்லது புகைப்படம் கூட எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துவிடுவதாகவும், அதற்காகவே தாம் எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷங்கர் தனது இணையதளத்தில் எழுதியுள்ளதாவது: “எந்திரன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மிகத் தீவிரமாக உள்ளதால் நீண்ட நாட்களாக தளத்தில் எதுவும் எழுதவில்லை. அதுமட்டுமின்றி, எந்திரன் குறித்து ஒரு சின்ன தகவல் அல்லது புகைப்படத்தை இங்கு வெளியிட்டால் கூட அது ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை [...]
Endhiran Shooting Resumes
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் இந்த ஆண்டு வருமா வராதா என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு, அதாவது இன்னும் சில மாதங்களில் வெளி்யாகவிருக்கிறது எந்திரன் என்கிறார் இயக்குநர் ஷங்கர். ஒரு தயாரிப்பாளராக சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் முதல் படம் எந்திரன். ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். டேனி டெங்ஸோங்பா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஹாலிவுட்டின் சான்வின்ஸ்டன் [...]
Enthiran shooting completes shankar!!!
இரண்டு வருடங்களாக நீடித்த எந்திரன் ஷூட்டிங் முழுமையடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் ரஜினி நடிக்கும் எந்திரன். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சுஜாதாவின் புகழ்பெற்ற நாவலான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ நாவல்களின் அடிப்படையில் உருவாகி வரும் விஞ்ஞானப் படம். ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், வில்லனாக டேனியும் நடித்துள்ளனர். கருணாஸ், [...]
Enthiran Rajini Punch Dialogue!!!
எந்திரன் படத்தின் பஞ்ச் டயலாக்குகள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அழுத்தமான அரசியல் வசனங்களை இதில் ரஜினிக்கு வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். குறிப்பாக ‘அர்த்தசாஸ்திரம் உங்க வழி; தர்மசாஸ்திரம் என்வழி’ என்று ரஜினி பேசும் வசனம் இந்தப் படத்தின் ஹைலைட்டாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட் படத்துக்கு சற்றும் குறையாத பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாகத் தயாராகி வருகிறது எந்திரன். இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி! இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படம் எந்திரன்தான். திருட்டு விசிடியைத் தடுக்கவும், [...]
Endhiran – Nude Scene by Rajini!!! ( Tamil)
Endhiran – Nude Scene by Rajini!!! ( Tamil) எந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட வைத்துள்ளது. அதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் [...]
Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil)
Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil) மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். [...]
Enthiran Shooting – Not allowed in Delhi ( Tamil )
ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு [...]
Endhiran Rajini with Political Dialogues
எந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார். இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் [...]
Endhiran Song Leak ( Tamil )
ரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் – தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது. படம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது. முன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் [...]
Director Shankar’s New WebPage
ஷங்கர் துவங்கிய இணையத்தளம்! இணையதளம் துவங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தளத்தில் இதுவரை வெளி வராத ரஜினியின் எந்திரன் ஸ்டில்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. எந்திரன் குறித்த எந்த படங்கள் மற்றும் செய்திகளையும் சன் பிக்சர்ஸ் மீடியாவுக்கு தராத நிலையில், இந்த தளத்தின் மூலம் ரசிகர்களின் சந்தேகங்கள், கேள்விகள் பலவற்றுக்கும் பதில் தர முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதுகுறித்து அவர் தளத்தில், “லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் [...]





